ஹீரோயின்களாக சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு கொஞ்சம் தந்திரமும் தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஏராளமான நடிகைகள் ஹீரோயின்களாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு காணாமல்போனவர்கள் இருக்கிறார்கள் அதிலும் இன்னும் சிலர் ஹீரோயினாக நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் சேவல், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி நடிகையாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா.
இவர் ரோமியோ ஜூலியட்,அரண்மணை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இருந்தார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து ஆம்பள திரைப்படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் அதன்பிறகு குப்பத்து ராஜா திரைப்படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்திருந்தார்.
இந்த திரைப் படங்களுக்கு பிறகு சொல்லும் அளவிற்கு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அதிக அளவில் கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மிகவும் குண்டாக புசுபுசுவென்று இருந்த பூனம் பாஜ்வா தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தனது உடலின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தனது உடல் எடையை குறைத்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்க்காக ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.