பல பேர் என்னிடம் மாட்டி இருக்காங்க.. அந்த தப்பை மட்டும் என் முன்னாடி செஞ்சிடாதீங்க – பூனம் பாஜ்வா

Poonam bajwa
Poonam bajwa

Poonam bajwa : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை பூனம் பாஜ்வா. இவர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவான “சேவல்” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது அழகையும், திறமையும் காட்டி அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்ததால் இவர் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர் தமிழை தாண்டி மற்றவர்களும் அதிகம் கவனம் செலுத்தியதால் இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.   இதனால் நடிகை பூனம் பாஜ்வா பிற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்திஓடிக் கொண்டிருக்கிறார்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அட்டகாசம் பண்ணி வருகிறார் இந்த நிலையில் தன்னிடம் பல பேர் மாட்டி உள்ளார்கள் அவர்களை வச்சி செய்து இருக்கிறேன் என கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சமிபத்திய பேட்டியில் பூனம் பாஜ்வாவிடம் தமிழில் உங்களுக்கு எத்தனை வார்த்தை தெரியும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும் சரளமாக பேசத் தெரியாது தவிர என்ன கூறுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.  எனக்கு தமிழ் தெரியாது என நினைத்துக் கொண்டு என் முன்பு ஏதேனும் ரகசிய அல்லது என்னைப் பற்றிய ஏதாவது பேசினாலே நான் புரிந்து கொள்வேன் எனக்கு தமிழ் தெரியாது என நினைத்துக் கொண்டு..

படப்பிடிப்பு தளத்தில் சிலர் என் கண் முன்னே சொல்லக்கூடாத விஷயங்கள் எல்லாம் சொல்லி மாட்டி இருக்கிறார்கள் பயங்கரமாக கோபப்பட்டு இருக்கிறேன் ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை எனக்கு புரியாதது போல நான் காட்டிக் கொள்வேன் என பேசினார் பூனம் பாஜ்வா.