தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான பல நடிகைகள் தமிழ் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்கள் உள்ளார்கள் என்று பொதுவாக தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடலாம் ஆனால் தமிழில் அப்படி கிடையாது.
தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தால் மட்டுமே உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மூலம் அறிமுகமாகி மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த அவர்தான் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இத்திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு,இந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.
அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 65 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்பொழுது லாக் டவுனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டிருந்தார்கள் அதற்கு தற்பொழுது துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.