பிரபல சூப்பர் ஸ்டாருடன் நடிகை பூஜா ஹெக்டே..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

pooja-hegde-1
pooja-hegde-1

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவ்வாறு இந்த திரைப்படம் படு தோல்வி அடைந்ததன் காரணமாக அதன் பிறகு நமது நடிகை தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை.

சொல்லப் போனால் அவருக்கு தமிழில் பெரும் வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை  இதனால் எப்படியாவது சினிமாவில்  பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்ற நமது நடிகை அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் பாலிவுட் திரைப்படங்களில் கூட கதாநாயகியாக நடித்து வருகிறாராம் மேலும் நமது நடிகை  பிரபல முன்னணி நடிகர்களான விஜய் பிரபாஸ் சிரஞ்சீவி போன்ற பல நடிகர்களின் திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக போற்றப்படுபவர் தான் நடிகர் அமிதாப் பச்சன் இந்நிலையில் நடிகை பூஜா  அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக சமூகவலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் நமது பூஜா அமிதாப்பச்சனுடன் படபிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலவற்றை தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.