சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே இவர் தமிழில் தற்போது தளபதி விஜயுடன் கைகோர்த்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்பொழுது தான் இவர் தமிழ் சினிமாவில் நடிக்கிறாரா என்றால் இல்லை.இதற்கு முன்பாக மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்திருந்தார் .
ஆனால் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால் அதன்பிறகு இவர் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை மாறாக தெலுங்கு சினிமாவில் தனது திறமை மற்றும் கவர்ச்சியை காட்டி ரசிகர்களையும் நடிகர்களையும் வளைத்து போட்டு நடித்ததால் இவர் அங்கு தவிர்க்க முடியாத நாயகியாக மாறினார்.
தற்போது 9 வருடங்கள் கழித்து பீஸ்ட் படத்தில் நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் குறித்து அவ்வப்போது சில அப்டேட்களை கொடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தை தவிர்த்து பல மொழிகளில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.
இது இப்படி இருந்தாலும் அவ்வபோது இணையதள பக்கத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க டைட்டான டிரஸை போட்டுகிட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார் . இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீங்கள் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நடிக்கிறீர்கள் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே. நான் அவரை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது ஏனென்றால் அவரிடம் அந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறது ஒரே வரியில் உங்களுக்கு நான் சொல்கிறேன் அவர் இனிமையானவர் என கூறி பதிலளித்திருந்தார்.