தமிழ் சினிமாவின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமாகிய பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் நடிப்பதை நிறுத்திவிட்டு தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் இவருக்கு தெலுங்கில் பிரபாஸ், ஹிந்தியில் சல்மான்கான் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தையும் பெற்ற நிலையில் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கேரக்டருக்கு நல்லா வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தற்பொழுது திடீரென தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதாவது தற்பொழுது இருக்கும் நடிகைகளுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. நடிகர்களை விட குறைவு என்றாலும் ஆனால் சில நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ரூபாய் 3 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டு வந்தது. எனவே அதேபோல் தான் பல திரைப்படங்களில் நடிப்பதற்காக சம்பளத்தையும் பெற்றார்.
இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதால் சம்பளத்தை குறைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு பூஜா ஹெக்டே தன்னுடைய படக்குழுவினர்கள் நஷ்டத்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டது நல்ல விஷயம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.