தளபதி விஜய் இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரு வழியாக முடிந்தது அதனை வெளிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தியது படக்குழு அதனைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகளை நோக்கி உள்ளது.
ஒரு வழியாக முடித்து விட்டு ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது. அதற்கு முன்பாக அப்டேட்களை கொடுக்க ரெடியாக இருக்கிறது அந்த வகையில் பீஸ்ட் படக்குழு. முதலில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தது அதனைத் தொடர்ந்து அரபி குத்து பாடலை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியீட்டு அசத்தியது.
தற்போது இந்த பாடல் இணையதள பக்கத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பீஸ்ட் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா, தாஸ் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் பூஜா ஹெக்டே விஜயிடம் பீஸ்ட் படகும் பற்றி பேசி உள்ளாராம்.
அது என்னவென்றால் இந்த படத்தில் எனக்கான அதிக அளவு கதாபாத்திரமும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதற்கு விஜய்யும் இந்த படத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் உங்களுக்கு அடுத்த படத்தில் அதிகம் கதாபாத்திரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளாராம். அப்படி பார்த்தால் விஜய்யின் 66 வது படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை அடுத்த படத்தின் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யின் அடுத்த நாயகி யார் என்பது இன்று வரையிலும் கூறாமல் இருந்து வருகின்றனர். எது எப்படியோ விஜய் வாக்கு கொடுத்துள்ளார் நிச்சயம் பூஜா ஹெக்டேயுடன் இணைந்த மற்றொரு இணைவார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.