தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவருடைய அழகு மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் இப்படம் சொல்லுமளவிற்கு வெற்றியை தரவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்த அல வைகுந்தபுரலோ படத்தில் இடம்பெற்றிருந்த புட்ட பொம்மா பாடல் தமிழில் டப் செய்து இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 65வது திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானது ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பூஜா ஹெக்டே சும்மிங் புல்லில் குளியல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.