வருத்தத்தில் இருப்பதாக ரசிகர்களிடம் மனம் திறந்த பூஜா ஹெக்டே.! எதற்காக தெரியுமா.!

pooja hegde 1
pooja hegde 1

நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இவர்களுக்குப் பிறகு தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர்கள் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே. தற்பொழுது உள்ள ரசிகர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு நடிகைகளுமே தமிழை விடவும் மற்ற மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தான் தமிழிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில்  முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு மற்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் பூஜா ஹெக்டே.

முகமூடி திரைப்படம் இவருக்குப் பெரும் தோல்வியை பெற்றுத்தந்தது இதன் காரணமாக பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இந்த முதல் படமே இவருக்கு பெரிய தோல்வியை தந்ததால் இதற்க்குமேல் தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைவுடன் இருந்தார்.

ஆனால் பீஸ்ட் திரைப்படத்தை நம்பி இருந்தும் தோல்வியை சந்தித்துள்ளது. இவ்வாறு பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரைவுலகிற்கு என்றி கொடுத்த இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்து வந்தார்.

ஆனால் இந்த திரைப்படமும் வெற்றி பெறாத காரணத்தினால் இதற்குமேல் தமிழில் நடிக்க மாட்டார் என்றும் தெலுங்கில் தான் நடிப்பதற்காக அதிக வாய்ப்புகள் இருந்து வருகிறது என்றும் இதனால் பூஜா ஹெக்டே அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.