மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தோல்வி படமாக அமைந்தது இதனையடுத்து அவர் தமிழ் பக்கமே தலை காட்டவில்லை.
அதன்பின் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திறமையையும், அழகையும் காட்டி நடித்ததன் காரணமாக உச்ச நட்சத்திரங்கள் உடன் கைகோர்க்கும் வாய்ப்பைப் பெற்றார் மேலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தனது அழகின் மூலம் கட்டிப்போட்டார். சினிமாவில் நடிகையாக இருந்தாலும் மாடலிங் தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
என்பது போல தொடர்ந்து பிகினி டிரஸ்சில் இருக்கும் புகைப்படங்களை சர்வசாதாரணமாக வெளியிட்டு அசத்தி வருகிறார். இதனால் இவரது பெயர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. தொடர்ந்து தெலுங்கு இந்தியில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்க வைக்க படக்குழு அழைத்தது.
கதையை கேட்டு பிடித்துப்போகவே உடனே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக நடித்து முடிந்த நிலையில் இன்னும் டப்பிங் பணிகள் மட்டுமே இருக்கின்றன. நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தை தவிர மூன்று,நான்கு படங்களில் நடித்து வருகிறார் ராதே ஷ்யாம், ஆச்சாரியா, சர்க்கஸ் ஆகிய படங்கள் கைவசம் இருக்கின்றன.
இந்தியா முழுவதும் பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள சினிமா நேரம்போக ஜிம் ஒர்க் அவுட் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இப்போதுகூட இவர் தம்மாத்தூண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
Slow and controlled movements. Try that next time 😉🥵 #fitwithanappetite #slowmotion pic.twitter.com/3HHcO38KMB
— Pooja Hegde (@hegdepooja) January 7, 2022