நீயெல்லாம் தளபதிக்கு ஜோடியா..? உண்மை வெளிய தெறிஞ்சா கழுவி கழுவி ஊத்திடுவாங்க..!

pooja-hegde-thalapathi

தமிழ் திரை உலகில் தனக்கென  ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வளம் வருபவர்தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் மாஸ்டர் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி  மக்கள் மனதை எளிதில் கவர்ந்து விட்டது.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலையில் தீவிரமாக இறங்கி விட்டார். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என்ற குழப்பம் இருந்த நிலையில் தற்போது  இயக்குனர் நெல்சன் இயக்கப் போவதாகவும் அதனை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக பல்வேறு இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருந்த நிலையில் நெல்சனை நம்பி இந்த திரைப்படத்தை ஒப்படைத்துள்ளார்.இவ்வாறு இந்த திரைப்படத்தின் பூஜையானது கடந்த மாதம் 31ம் தேதி கோலாகலமாக நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.  இந்நிலையில் தளபதிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவருடைய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தளபதி 65வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கும் பூஜா ஹெக்டே தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லவில்லை அதுமட்டுமில்லாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு கூட நெல்சன் போட்ட பதிவினை மட்டுமே பகிர்ந்துள்ளார்.

pooja hegde
pooja hegde

ஆனால் கோபமடைந்த தளபதியின் ரசிகர்கள் பூஜா ஹெக்டேவை சும்மா கண்டமேனிக்கு இணைய தளத்தில் வைத்து செய்து வருகிறார்கள்.  அது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான வார்த்தைகளையும் தளபதி ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

fans comment-1
fans comment-2