நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட்டு வந்தது.
சூட்டிங் ஆரம்பத்தில் விஜய் பூஜா ஹெக்டே இருவரும் பாடல் ஒன்று ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது அதன்பின்பு சில ஸ்டண்ட் காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இப்படி செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன மேலும் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த படம் குறித்து சில அப்டேட்களை அவ்வப்போது கூறிவந்தார்.
இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்தப் படத்தின் அப்டேட் எதிர்நோக்கி இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர் இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோரை தொடர்ந்து அவர் யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற முக்கிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளது. இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்து சென்னையில் இருந்து தற்போது மற்றொரு திரைப்படத்திற்காக பூஜா ஹெக்டே மும்பை சென்று உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதை உறுதிப்படுத்தும் விதமாக விமான நிலையத்தில் பூஜா ஹெக்டே சென்றபோது எடுக்கப்பட்ட படம் தற்போது ரிலீசாகி உள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை தன்வசப்படுத்தி உள்ளார் அதனால் இந்த ஆண்டில் அதிக படங்களை கைப்பற்றி உள்ள நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜா ஹெக்டே மும்பை விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.
