மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா பக்கம் தாவியவர் நடிகை பூஜா ஹெக்டே. முதலில் இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் ஆனால் முதல் படம் மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைவே.. சிறு இடைவெளிக்குப் பிறகு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக தெலுங்கு பக்கத்தில்தான் தொடர்ந்து படங்களில் நடித்தார். தெலுங்கு ரசிகர்களுக்கு கவர்ச்சி பிடிக்கும் என்பதால் மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்து கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன் காரணமாகவே குறைந்த நாட்களிலேயே அசுர வளர்ச்சியை எட்டியது மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். இப்படி ஓடி கொண்டிருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் பக்கம் திரும்பினார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து விடலாம் என எண்ணினார் ஆனால் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கு பக்கம் நடித்தார் இவர் நடித்த ஆச்சாரியா படமும் தோல்வி படமாக அமையவே தற்பொழுது ராசியில்லாத நடிகையாக சினிமாவுலகில் பார்க்கப்படுகிறார் இந்தநிலையில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்தில் பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசித்தது.
ஆனால் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியதால் வேறு வழியின்றி 27 வயது நடிகையான பிரியங்கா அருள்மோகன் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இத்தனை வருஷமாக தெலுங்கு சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த பூஜா ஹெக்டேவை தற்போது வளர்ந்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன் ஓவர்டேக் செய்து பட வாய்ப்பை கைப்பற்றுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.