ஏராளமான முன்னணி நடிகைகள் தற்போதெல்லாம் திரைப்படங்களில் நடனமாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் சில பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு மட்டும் வந்து ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார்கள்.
அந்தவகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாஸில் மற்ற கதாபாத்திரத்தில் சுனில் எனத் தொடர்ந்து இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றதோ அதைவிட பல மடங்கு ரசிகர்களைக் கவர்ந்த ஒன்று தான் ஓ சொல்றியா மாமாவுக்கு ஓஓ சொல்றியா பாடல். இந்தப் பாடலில் சமந்தா நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவரின் நடனத்தினால் இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இதேபோல் பாடல் இருக்குமா என்று கேட்டு வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகை பூஜா ஹெக்டே இதேபோல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவுள்ளார்.
அத்திரைப்படத்தில் வெங்கடேஷ், தமன்னா ஆகியோர்களின் கூட்டணியில் உருவாகியுள்ளது. அத்திரைப்படம் தெலுங்குத் திரைப்படமாகும் F3 திரைப்படத்தில் தான் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவுள்ளார். அந்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மிகவும் ஆவலாக இந்த பாடலின் ரிலீசுக்கு காத்து வருகிறார்கள்.