ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வரும் பூஜா ஹெக்டே தற்போது தமிழிலும் கால்தடம் பதித்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தளபதி விஜயின் 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் ஆச்சாரியா, சிக்ஸர், ராதே ஷியாம் போன்ற பல டாப் நடிகர்கள் படத்தில் நடிக்க வருவதால் அவரது மார்க்கெட் உச்சத்தை எட்டியுள்ளது .
பூஜா ஹெக்டே தற்போது விஜயின் 65 படத்தில் நடித்து வருகிறார் திரைப்படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல கோடிகளை அள்ளி வீசி உள்ளதால் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் ஒவ்வொரு சீனையும் வேற லெவல் செதுக்கி வருகிறார்.
இப்படி இருந்தாலும் முதல் கட்ட படப்பிடிப்பு தவிர 2ம் கட்ட படப்பிடிப்பு படக்குழு எடுக்க முடியாமல் தள்ளாடிய நிலையில் ஜூலை மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எடுக்கப்படுமென சமிப காலமாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரணம் பூஜா ஹெக்டே மும்பையிலிருந்து தற்போது விஜய் 65 படதிற்காக விமானத்தின் மூலம் சென்னை வந்து இறங்கினார் அப்போது வேற லெவெலில் வந்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகளும் தற்போது வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதோ பூஜா ஹெக்டே விமான நிலையத்தில் இருந்து மாஸ்ஸாக வந்த புகைப்படம்.
#Beast Shooting Begin #PoojaHegde Spotted In Chennai. #Master @actorvijay pic.twitter.com/BJKKvhLszY
— Samrat Of South India (@ActVijaySamrat) June 30, 2021