தனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் நடிகை பியா..! வித விதமான போஸில் வெளிவந்த புகைப்படங்கள்..!

piya-1
piya-1

தமிழ்சினிமாவில் பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பியா பாஜ்பாய்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் மிக வெகுவாக ரசிகர்களை கவர்ந்த நடிகை என்று கூட சொல்லலாம்.

அந்த வகையில் நமது நடிகை அறிமுகமான திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்தின் ஏகன் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதேபோல ஜெய்யுடன் கோவா திரைப்படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் சிறப்பு அம்சம் கொண்டது.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் மூலமாக மிகவும் பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் கெத்து காட்ட ஆரம்பித்து விட்டார்.

பொதுவாக நமது நடிகை திரைப்படங்களில் கவர்ச்சி காட்ட ஒருபோதும் பஞ்சம் வச்சதே கிடையாது அந்த வகையில் தன்னால் முடிந்த அளவிற்கு மிகவும் மாடர்னாக உடை அணிந்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு இவர் அணிந்திருக்கும் ஆடையை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் திரைப்படம் பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் நமது நடிகை லோஸ்ட் என்ற ஹிந்தி திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு நீண்டநாள் கனவாக இருந்த ஒரு விஷயம் என்று உண்மையாகியுள்ளது. அதாவது நடிகை பியா பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளார்.

இவ்வாறு தன்னுடைய ஆசையை நிறைவேறியதை தொடர்ந்து தன் வாங்கிய காரின் முன்பு நின்று விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் பியாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.