தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த வருகிறார் மேலும் பெரும்பாலும் இவருடைய நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் இதன் காரணமாக எந்த படமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய உடலமைப்பை மாற்றிக் கொண்டு தன்னுடைய கடின உழைப்பை செலுத்தி வரும் முக்கிய நடிகர் விக்ரம் என்று கூறலாம்.
மேலும் இவர் பெரிதும் ரிஸ்கடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து புதிய திரைப்படத்தினை உருவாக்கி வருகிறது இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
ஆனால் சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு யார் ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என தகவல் வெளியான நிலையில் அவர் நடிக்கவில்லை என்ற தகவல் தற்பொழுது உறுதியாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது ஆந்திராவில் கடப்பா பகுதியில் நடைபெற்று வருகிறது. எனவே தற்பொழுது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பார்வதி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே ஆந்திராவில் கடப்பா பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகை பார்வதி கலந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து பட குழுவினர்கள் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து இந்த தகவல் கசிந்து இருக்கிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் மேலும் இந்த படத்தில் யார்? யார்? நடிக்கிறார்கள் எனவும் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.