பிறந்தநாள் அதுவுமாக தல அஜித்தின் என்னை அறிந்தால் பாடலை போட்டு என்ஜாய் பண்ணியா பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ.!

yennai-arindhaal-2

தமிழ் சினிமாவில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி, இவர் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து சிறந்து விளங்கி வருகிறார், இவர் தமிழில் மரியான் என்ற திரைப்படத்தில் தனுஷுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடியுள்ளார், இவரின் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

parvathy
parvathy

இந்தநிலையில் பார்வதி அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அத்தாறு அத்தாறு பாடலுக்கு காரில் அமர்ந்தபடி தனது தோழியுடன் நடனமாடியுள்ளார், இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் பிறந்தநாளை இப்பொழுது இப்படித்தான் கொண்டாட முடியும், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் இவர் மட்டும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.