மோடிக்கு எதிராக ஓவியா போட்ட ட்வீட்.!! ஆதரவு தெரிவித்த பிக்பாஸ் நடிகை. !! இதோ

Oviya-Helen
Oviya-Helen

களவாணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு இந்த படமும் வெற்றியைத் தரவில்லை.

பிறகு 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர் பட்டாளம் இவருக்கு என்றே உருவானது அது மட்டுமல்லாமல் பல படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வர உள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் பொழுதும்  நெட்டிசன்கள் #GoBackModi என்ற ஹெஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது பெரிய போராட்டமாக நடைபெற்றுவரும் விவசாயிகள் மற்றும் வேளாண் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் பிரதமர் தமிழகம் வருவதால் மீண்டும் #GoBackModi ஹெஷ்டேக் ட்விட்டரில் ஆரம்பித்து மோடிக்கு எதிரான கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்.

பொதுவாக இத மாதிரி செயல்களில் சினிமா பிரபலங்கள் தலையிட மாட்டார்கள் ஆனால் நடிகை ஓவியா தற்பொழுது ட்விட்டரில் #GoBackmodi என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பிக்பாஸ் காஜல் பசுபதியும் ஆதரவை தெரிவித்துள்ளார்.