Actress Oviya birthday intreview video:தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் நடிகை ஓவியா ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர் மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற பிறமொழிகளில் நடித்து பிரபலமடைந்தார்.களவாணி, மன்மதன், முத்துக்கு முத்தாக, கிருத்திகா, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு ,மூடர் கூட்டம் இன்னும் பிற படங்களில் நடித்து கலக்கி வந்தார்.
2017ஆம் ஆண்டு விஜய் டிவியின் மூலம் வெளிவந்த பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருடைய வெகுளி தனம், மற்றவர்களின் மீது வைக்கும் அன்பினால் அனைவருக்கும் பிடித்தவராக மாறினார். மேலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய பிரபலத்தை தந்தது.
ஆனால் இவர் சில பிரச்சனைகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இவருகென ஓவியா ஆர்மி என்ற ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
அவருடைய பிறந்தநாள் அன்று யூட்டியூப் சேனலில் பேட்டி ஒன்று அளித்தார். அதாவது இந்த லாக் டவுன் நாட்களில் எதனை மிஸ் பண்னுகிறிர்கள் என கேட்டதற்கு நான் சரக்கை மிஸ் பண்றேன் என கூறியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் நம்பலுக்கும் ஒரு காலம் வரும் என்ற பழமொழியையும் கூறியுள்ளார்.
அதன் பிறகு லாக்டவுனின் காரணமாக எங்கும் போகாமல் வீட்டிலேயே இருக்க மிகவும் கடுப்பா இருக்கிறது என வருத்ததுடன் கூறியுள்ளார். எனவே வெளியில் சுற்ற சிறு வாய்ப்பு கிடைத்தாலும் விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.