மலையாள சினிமாவின் மூலம் சினிமா பயணத்தை தொடர்ந்து பின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வலம் வந்தவர் நடிகை ஓவியா. இளம் வயதிலேயே சினிமா உலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு படத்தின் கதையை சரியாக தேர்வு செய்து ஆரம்பத்தில் நடித்து தொடர்ந்து வெற்றியைக் கண்ட நடிகைகளுள் ஒருவராக இவர் பார்க்கப்பட்டவர் ஓவியா.
அந்த வகையில் தமிழில் இவர் களவாணி என்ற திரைப்படத்தில் நடித்து பெயரையும், புகழையும் பெற்றார். அதன் பின் மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம், சில்லுனு ஒரு சந்திப்பு, புலிவால், யாமிருக்க பயமே, முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் பெரிதளவு கிளாமர் காட்டாமல் தனது திறமையை நம்பிக்கை வைத்து நடித்து மக்கள் மனதில் பிரபலமடைந்தார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் 90ml என்ற திரைப்படத்தில் நடித்தது அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த சினிமா உலகில் அதன்பின் பல்வேறு படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி கிடைக்காமல் போனதால் இவர் ஆள் அடையாளம் தெரியாமல் போனார்.
மீண்டும் வீட்டை இடத்தை பிடிக்க நடிகை ஓவியா தொடர்ந்து தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமரான உடையில் வலம் வந்தார் அதுவும் எடுபடவில்லை தற்போது 2022ல் ஓரிரு படங்களை தன் வசம் வைத்திரக்கிறார் அது வெற்றிபெறும் பட்சத்தில் அவர் தனது இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் ராஜபீமா, சம்பவம் ஆகிய படங்கள் இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஓவியா திடீரென உடல் எடையை தாறுமாறாக குறைத்து தற்போது சிக்கென்று மாறியுள்ளார். கிளாமரான உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.