actress oviya latest twit viral in social media: தமிழ் திரை உலகில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் ஹிட்டு கொடுத்ததன் காரணமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.
இவ்வாறு பிரபலமான நடிகை தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் தட்டி தூக்கிவிட்டார். அதன் பிறகு விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விட்டார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் அவை அனைத்தையும் மிக தைரியமாக சந்தித்த ஓவியா ரசிகர் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் எதையும் ஒளிவு மறைவு இன்றி பேசி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
இவ்வாறு பேரும் புகழும் உச்சத்துக்கு சென்ற பிறகு அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டார் இதன் விளைவாக 90ml என்னும் திரைப்படத்தில் நடித்து தன்னை தானே இழிவு படுத்திக் கொண்டார்.
இதன் விளைவாக தற்போது அம்மணிக்கு படவாய்ப்புகளும் வெகுவாக குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் பல எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வெறுப்பை மட்டுமே சம்பாதிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் சமீபத்தில் மோடி சென்னைக்கு வருகை தந்தபோது கோ பேக் மோடி எனும் ஹஷ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் இதைப்பார்த்த ஓவியாவின் எதிரியான காயத்ரி ரகுராம் வாயை மூடு போடி என பதில் அளித்துள்ளார்.
இவ்வாறு இவர் பதிவிட்ட அந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் தற்போது மிக வைரலாக பரவி வருகிறது.