கங்காரு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் ஓவியா. இப்படங்களை தொடர்ந்து மேலும் மலையாள திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்தி 2010ம் ஆண்டு களவானி என்ற திரைப்படத்தில் நடித்தார். முதல் படமே அவருக்கு அமோக வெற்றியை கொடுத்ததன் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார் அந்த வகையில் இவர் முத்துக்கு முத்தாக, மெரினா ,கலகலப்பு ,சில்லுன்னு ஒரு சந்திப்பு ,மூடர் கூடம் ,மதயானைகூட்டம் ,யாமிருக்க பயமே போன்ற பல சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கமலஹாசன தொகுத்து வழங்கிய bigboss2 கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார் இப்படி வலம் வந்து கொண்டிருந்தார்.
இருப்பினும் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவர் 90ml என்ற திரைப்படத்தில் நடித்தார் இத்திரைப்படத்தில் சமூக அக்கறை உள்ள கருத்தை சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்மறையான கருத்துகள் உலா வந்ததால் இவர் விமர்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பட வாய்ப்பையும் தற்பொழுது இல்லாமல் இருந்து வருகிறார்.
இருப்பினும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அவ்வபொழுது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் கருப்பு நிற உடையில் செம்ம நச்சின்னு இருக்கும் புகைபடத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.