தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நடிகை தான் ஓவியா.இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார்.
இதுவரை இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு சொல்லும்படி களவாணி திரைப்படத்தில் நடித்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை அந்த வகையில் இவருக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அது வேறு எந்த வாய்ப்பும் கிடையாது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ஓவியா இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு மக்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர் பேசும் வார்த்தைகள் பாடிய பாடல்கள் என அனைவரையும் ஈர்த்து விட்டன.
இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து நமது நடிகை பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் இவர் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி விட்டு கதாபாத்திரத்தை கவனமாக தேர்வு செய்யாமல் விட்டதன் காரணமாக தற்போது வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்.
என் நிலையில் அடிக்கடி கடை திறப்பு விழா விளம்பரங்கள் போன்ற சிறு சிறு விளம்பர படங்களில் நடித்து வரும் ஓவியா இதன்மூலமாக சம்பாதித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஓவியா சரவணா ஸ்டோர் கடை திறப்பு விழாவிற்கு கலந்து கொண்ட பொழுது அவர் ஒரு கோடி வரை சம்பளம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இவ்வாறு வெளிவந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை.