விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..! கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்ட நடிகை நிவேதா தாமஸ்..!

nevetha-dhamas
nevetha-dhamas

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி, சிவமயம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் ஒரு நேரத்தில் திரைப் படங்களிலும் நடிக்க  விட்டார்.

அந்தவகையில் இவர் போராளி நவீன சரஸ்வதி சபதம் மற்றும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா மற்றும் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக நமது நடிகையை சிறுவயதிலிருந்தே நாம் சீரியலில் பார்த்து ரசித்து வருகிறோம். ஆனால் இவருக்கு இது வரை ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. ஆனால் தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்பட வாய்ப்பை கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்றில் இவர் நடித்துள்ளது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். மேலும் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ  பாடல் உலகமெங்கும் மிக பிரபலமானது.

அந்த பாடல் எடுக்கப்பட்ட மலையில் பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே ஏற முடியும் அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸ் 6 மாதமாக தீவிர பயிற்சி பெற்று 5.895மீட்டர் கிளிமஞ்சாரோ மலையில் ஏறி உள்ளார்.

nevetha-dhamas
nevetha-dhamas