நடிகர்களுக்கு இப்படிப்பட்ட குணம் தான் இருக்கும் என உண்மையை உடைத்த நடிகை நித்யா மேனன்.!

nithya-menon
nithya-menon

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார். அந்த வகையில் தமிழில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு மெர்சல், இருமுகன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் முக்கியமாக அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெருதளவிலும் வரவேற்பை பெற்றார் நித்தியா மேனன். மேலும் இந்த படத்தில் தாய்க் கிழவி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுநிலையில் இவரை தாய்க்கிழவி  என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

எனவே எனக்கு தாய்க்கிழவி என கூப்பிடுவது பிடிக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்த நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனன் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் செய்தி வாசிப்பாளர் ஹீரோயின்கள் ஒரே படத்தின் நடிக்கும் பொழுது போட்டி பொறாமை ஏற்படுமா? எனக் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த அவர் இரு நாயகிகள் ஒன்றாக நடிக்கும் பொழுது நல்லா இருக்கும் சந்தோஷமாக பேசிக்கொள்வோம் ஆனால் போட்டி பொறாமை இருப்பது என்னவோ நாயகர்களுக்கு தான். இரு நடிகர்கள் இணைந்து நடிக்க மாட்டார்கள் நடித்தாலும் எனக்கு தான் உனக்கு தான் என சண்டைதான் போட்டுக் கொள்வார்கள் என ஓப்பனாக நடிகர்களை பற்றி நித்யா மேனன் கூறி உள்ளார்.