தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் திரைப்படத்தில் நடித்தது பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது.
மேலும் தற்போது நிக்கி கல்ராணி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ராஜவம்சம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடித்திருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணி நடித்திருப்பார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது தற்சமயம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்பட படப்பிடிப்பில் நிக்கி கல்ராணி குழந்தைகளுடன் பலூன்களை ஊசியால் குத்தி குத்தி வெடித்து வருவார்.
அப்பொழுது ஒரு பலூனில் மட்டும் தண்ணீர் இருந்துள்ளது இதனால் அந்த பலூனை வெடிக்கும் பொழுது அவர் மீது தண்ணீர் பட்டுவிடும் இதனால் கோபம் அடைந்த நிக்கிகல்ராணி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போல வீடியோ வெளியிட்டு ராஜ வம்சம் திரைப்படம் இன்று முதல் திரையரங்கில் என பதிவிட்டு இருந்தார்.
இவ்வாறு வெளிவந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்ததுமட்டுமில்லாமல் கமெண்ட்களையும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்