Actress Neelima Rani: நடிகை நீலிமா தனது தந்தையால் பல கஷ்டங்களை சந்தித்து நடு ரோட்டிற்கு வந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை நீலிமா ராணி தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்கள் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
அந்த வகையில் சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை ஆனால் சீரியல்கள் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். முக்கியமாக எதிர்மறை கேரக்டரில் நடித்து பிரபலமான நீலிமா ராணி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தனது வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்து கூறியுள்ளார். அதில் நான் தமிழக மக்களுக்கு நல்ல நடிகை ஆனால் என் குடும்பத்திற்கு நான் ஒரு பொன் முட்டையிடும் வாத்து மட்டுமே குடும்ப சூழல் காரணமாகத்தான் படங்களை நடிக்க வந்தேன்.
எனது வருமானத்தில் தனது தம்பியின் படிப்பு மற்றும் குடும்ப செலவுகள் நடந்தனர். 18 வயது வரை குடும்ப பாரத்தை சுமப்பது எனக்கு பெருமையாக இருந்தது படம் மற்றும் சீரியல்களின் நடிக்க வாய்ப்பு வந்தபோது மாதம் ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பாதித்தேன் அயராது உழைத்து ஒரு காலத்தில் நிறைய பணம் சம்பாதித்தேன். ஆனால் அப்பாவின் கெட்டப்பழக்கத்தால் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது.
மாநகரம் திரைப்படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..
சில வருடங்கள் கழித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்த என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தபோது எனது சேமிப்பு முழுவதையும் இழந்துவிட்டதை உணர்ந்தேன். என் தந்தை சூதாட்டத்தில் மிகவும் விருப்பமாக இருந்தாலும் அவர் நான் கஷ்டப்பட்ட சம்பாதித்த பணத்தை எல்லாம் சூதாடினார். இறுதியில் அந்த சூத்தாட்டம் அவரது உயிரைப் பறித்தது.
பிறகு நான் என் அம்மாவுடன் தெருவுக்கு செல்ல வேண்டி இருந்தது பணம் இல்லாமல் கடனுக்கு மேல் கடன் வாடகை வீட்டிற்கு மாறிய பிறகு மீண்டும் வேலை செய்து பணம் சம்பாதித்தேன். இன்று அந்த வாடகை வீட்டை வாங்கும் நிலைக்கு வந்து விட்டேன் எனக்கு வெளியில் எந்த பிரச்சனையும் இல்லை மேலும் 31 வருடங்களாக திரையுலகில் நடித்து வரும் எனக்கு தனது குடும்பமே எதிரியாக மாறிள்ளது என்பது வேதனையாக இருக்கிறது.
பூஜை போட்டு டிராப்பான பாலாவின் முதல் படம்.? சேது படம் உருவானது இப்படித்தான்.!
திருமணத்திற்கு பின் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மற்றொரு நிதி நெருக்கடி வந்தது. 2011ஆம் ஆண்டு எனது கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது ஆனால் அதன் காரணமாக கோடிக்கணக்கில் கடனில் சிக்கினோம் வீடு வாடகைக்கு கூட பணம் இல்லை நண்பனின் வீட்டிற்கு சென்று நான்கு வருடங்கள் தங்கி மீண்டும் உயிர் பெற்றோம் என கூறியுள்ளார்.