தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நஸ்ரியா. இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே தனது சிறந்த நடிப்புத் திறமையாலும் அழகாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.
நஸ்ரியா நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆர்யா, நயன்தாரா,ஜெய் உள்ளிட்ட இன்னும் பல முன்னணி பிரபலங்கள் சேர்ந்து நடித்திருந்த ராஜாராணி திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவ்வாறு இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் அடுத்த படமே தனுஷுடன் இணைந்து நையாண்டி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் இவரின் எக்ஸ்பிரஸ் ஆனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். எனவே ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தன்னை விட பத்து வயது அதிகமாக இருக்கும் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.
பகத் பாசில் தமிழிலும் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.
திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது செம அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.