திருமணம் ஆகியும் குழந்தைத்தனம் மாறாமல் சேட்டை செய்யும் நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள்.!!

actress nazriya

Actress Nazriya cute photos: நடிகை நஸ்ரியா தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைத் தொடர்ந்து இவர் நையாண்டி,  திருமணம் எனும் நிக்கா, வாயை மூடி பேசவும், நீ நல்லா வருவடா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் பாசில் என்பவரின் மகனான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பிலிருந்து ஒதுங்கிய இவர் பின்னர் 2018 ஆம் ஆண்டு கூடே என்ற மலையாள படத்தில் திரும்பவும் ரி என்ட்ரி கொடுத்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி எடுக்கும் அந்த புகைப்படங்களில் அவர் காட்டும் ரியாக்சன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன.

திருமணம் ஆகியும் இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் இருக்கும் நடிகை நஸ்ரியாவை பார்த்து ரசிகர்கள் இவங்க என்ன செஞ்சாலும் அழகாதான் இருக்கு என கூறுகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nazriya1
nazriya1
nazriya
nazriya
nazzriya3
nazzriya3
nazriya2
nazriya2