ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கிய நடிகை நஸ்ரியாவின் கணவர்!! அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்..

nazriya2
nazriya2

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. பின்னர் இவர் மலையாள நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பகத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் பகத் பாசில் தமிழில்  சூப்பர் டீலக்ஸ் ,  வேலைக்காரன், பெங்களூர் நாட்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

nazriya
nazriya

மேலும் இந்த நிலையில் நஸ்ரியாவும் பகத் பாசிலும் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் மற்றொருபுறம் பகத் பாசில் நடித்தும் வந்தார். இந்த நிலையில் இவர் தற்போது பிரேமம் திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ்  இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இசையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும்  திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் தற்போது கொச்சினில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

nazriya
nazriya

இந்த நிலையில் நடிகர் பகத் பாசில் அவர்கள் சூட்டிங்கின் போது கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து முகம் மற்றும் மூக்கு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.