தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருந்ததால் ஆரம்பத்திலேயே இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன அதை சரியாக பயன்படுத்தி டாப் நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டதால் தனக்கென ஒரு ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் நிறுவினார்.
சினிமாவுலகில் தொட்ட எல்லோரிடத்திலும் வெற்றி கண்டாலும் நிஜ வாழ்க்கையில் சர்ச்சை மற்றும் பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக அதிலிருந்து விலகி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர் மேலும் அவ்வப்போது ஊர் சுற்றி வருகின்றனர் அது பிரச்சனை இல்லை..
ரசிகர்களின் முதல் கேள்வி என்னவென்றால் நீங்கள் காதலிப்பது குற்றம் இல்லை ஆனால் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர் ஆனால் வகாதலன் விக்னேஷ் சிவன் ரெடியாக இருந்தாலும் நடிகை நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பது மற்றும் தனது குடும்பத்தை கவனித்து வருவதால் திருமணம் செய்யக் கால அவகாசம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
சமூக வலைதள பக்கங்களில் இவர்களது புகைப்படங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விக்னேஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது பல கேள்விகளை எழுப்புவதும் கலாய்க்கும் தொடங்கி உள்ளனர்.
கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி எல்லாம் பண்ணலாமா என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..