கை குழந்தையாக நடிகை நயன்தாரா..! இணையத்தில் கெத்து காமிக்கும் நயன்தாராவின் புகைப்படம்..!

nayanthara

actress nayathara childhood photos: தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் அல்லது நடிகை நீண்ட காலம் திரையுலகில் நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரிய விஷயம் தான்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வென்றவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டு வருகிறார். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.  இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி பிரபலங்களுடன் நடித்து தனக்கான ஒரு பெயரையும் புகழையும் ஒரு அந்தஸ்தையும் பெற்று கொண்டவர்.

இன்னும் சொல்லப்போனால் பிரபல முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகை இவர்தான்.  இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி அவர்களது இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தில் குடும்ப பாங்கான முகத்தை காட்டி அனைவரையும் தன்னுடைய அழகில் மயங்கியவர்.

இப்படி பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய அழகாலும் சிறந்த நடிப்பாலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல்  அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

ஆரம்ப காலம் முதல் தற்போது வரை தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்கும் ஒரே நடிகை நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள்தான். சமீபகாலமாகவே  தனது காதலனான விக்னேஷ் சிவன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக எடுக்கப்படும் சில புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை நயன்தாராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக வலம் வருவது மட்டுமல்லாமல் பலரும் கொஞ்சி தூக்காத குறை மட்டும் தான்.அந்த அளவிற்கு ளைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara