Actress Nayanthara: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்பொழுது பிரபல நடிகர் ஒருவருக்கு அக்காவாக நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக இருக்கும் நடிகை நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பிறகு அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தில் கமிட் ஆனார்.
ஆனால் இந்த படத்தின் கதை தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். எனவே நயன்தாராவும் அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது. தற்பொழுது விக்னேஷ் சிவன் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார். அதற்கான பணிகளும் சமீப காலங்களாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு எல்ஐசி என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
மேலும் இயக்குனர் மிஷ்கின், நடிகர் எஸ்.ஜே சூர்யா ஆகியோர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லியோ படத்தை தயாரித்த செவன் கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார்.
கப் கேக்கை தனது ஆசைக்காக பயன்படுத்திக் கொண்ட பப்லு.! நடந்த உண்மைகளை உடைத்த பிரபலம்..
இவ்வாறு இந்த சூழலில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக இப்படத்தில் நடிக்க உள்ளாராம் நயன்தாரா. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஹீரோயினுக்கான மவுசு குறைந்ததால் நயன்தாரா அக்காவாக நடிக்க ஓகே சொல்லி உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.