தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை தான் நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆரம்பத்தில் கமர்சியல் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு கிளாமருக்கு கொஞ்சம் இடம் காட்டிய நமது நயன்தாரா பின்னர் முன்னணி நடிகை அந்தஸ்தைப் பெற்றதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே அதிக அளவு நடிக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிவடைந்துவிட்டது. நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தற்போது கணவனாக இருந்தாலும் இதற்கு முன்பாக சிம்பு பிரபுதேவா என இருவரிடமும் காதல் தோல்வி அடைந்தவர்.
இவ்வாறு இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்த உடன் நமது நடிகை விக்னேஷ் சிவனை மட்டுமே நாடி இருந்தது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் தற்போது சொந்தமாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இது ஒரு பக்கமிருக்க நடிகை நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளாராம் அதில் அவர் கூறியது என்னவென்றால் முன்பை போல கதாநாயகர்களுடன் அதிக அளவில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியது மட்டுமில்லாமல் கவர்ச்சி காட்சிகளுக்கும் தடை விதித்துள்ளார்.
இதனால் 10 கோடிக்கும் மேலாக செலவழித்து அவரை புக் செய்த தயாரிப்பாளர்கள் தற்பொழுது நயன்தாராவை வைத்து திரைப்படம் இயக்கவே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் நயன்தாரா தன்னுடைய இல்லாரை வாழ்க்கைக்காக நட்சத்திர வாழ்க்கையை இழந்து விடுவாரோ என பலரும் வருத்தத்தில் உள்ளார்கள்.