காதலன் விக்னேஷ் சிவனை அழைத்து வந்து தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை நயன்தாரா.! ஒருவேளை பரிசு இது தானோ.!

nayanthara
nayanthara

தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வென்று தற்பொழுது மிகவும் கெத்தாக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து விட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு நல்ல புகழைப் பெற்றுத்தந்தது இதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.என்னதான் இவர் தமிழில் நடித்தாலும் தமிழில் நடிப்பதற்கு முன்பே பல மொழி திரைப்படங்களில் நடித்து விட்டு தான் பின்பு தமிழில் நடிக்க வந்தார்.

என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பல காதல் சர்ச்சையிலும் சிக்கினார் இவர் இறுதியாக நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து தற்போது இருவரும் காதலித்து வருகிறார்கள்.

nayanthara
nayanthara

இவர்கள் இருவரும் ஊர் சுற்றி வரும் பொழுது எடுத்த பல புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இன்னும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

nayanthara
nayanthara

இந்நிலையில் தனது அம்மாவின் பிறந்த நாளை அவர் தனது காதலன் விக்னேஷ்சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் அம்மா விக்னேஷ் சிவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வதற்கு ரெடியாகிவிட்டார் போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.