தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் எப்போழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில திரை பிரபலங்களோ இவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் பிரிந்து விடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்வதையும் பார்த்து வருகிறோம்.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் மிகவும் ஜாலியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு ரொமான்டிக்காக எடுக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்தவகையில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவான திரைப்படம் நானும் ரவுடிதான் இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.இத்திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்களுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில் காதலை ஏற்றுக் கொள்ளும் பொழுது விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இதுவரையிலும் உன் வாழ்க்கையில் என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை இதற்குமேல் மகிழ்ச்சியாக வாழலாம் என்று திட்டவட்டமாக கூறி உள்ளாராம்.
ஆனால் நயன்தாராவின் மீது பல காதல் சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் சிம்புவை காதலித்து வருகிறார் என்று கூறப்பட்டது. பிறகு பிரபுதேவாவுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார் என்று பத்திரிக்கையாளர்கள் விமர்சித்து வந்தார்கள்.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சொன்னதை உறுதிப்படுத்தும் வகையில் நயன்தாராவும் திடீரென்று பிரபுதேவாவை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மதம் மாறினார். பிறகு சில பிரச்சனையின் காரணமாக நயன்தாரா பிரபுதேவாவை விட்டு பிரிந்துவிட்டார். எனவே இந்தப் பிரச்சனையினால் தான் நயன்தாரா இதற்குமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று மிகவும் அமைதியாக விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.
நயன்தாராவின் மீது பல காதல் சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நயன்தாராவுடன் மகிழ்ச்சியாக வாழ்வதையே விக்னேஷ் சிவன் விரும்புகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது.