தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருவது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நமது நடிகை சுமார் 7 வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது எனவோ நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வந்தார் இதில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது.
இவ்வாறு பிரபலமான நடிகை நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வதாக வெளிவந்த இந்தச் செய்தியைத் தொடர்ந்து இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது அவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, விஜய், ஏஆர் ரகுமான் போன்ற பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் 200 விஐபிகளுக்கு பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்தை போட்டோ வீடியோ எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது.
ஏனெனில் இந்த திருமண நிகழ்ச்சியை Netflix நிறுவனம் வாங்கியதன் காரணமாக யாருக்கும் இந்த திருமணத்தில் செல்போன் அனுமதி கிடையாதாம் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு வரும் பொழுது சரியான அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட்டது என கூறப்படுகிறது.