ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் தொழில்..! அடுத்த பிசினஸில் அடி எடுத்து வைக்கும் நடிகை நயன்தாரா..!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து விட்டார்.

அந்த வகையில் நமது நடிகையே ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் கூட லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள் இந்நிலையில் அவர் தன்னுடைய இரண்டு காதல் தோல்விக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

நயன்தாரா தன்னுடைய ஆசையை காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சமந்தா என பலர் நடித்து வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க நயன்தாரா சமீபத்தில் ரவுடி பேபி புரோடக்சன் ஒன்றை ஆரம்பித்து அதில் சிறிய சிறிய  திரைப்படங்களாக உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா ஒரு டீ கம்பெனி ஒன்றையும் நடித்தி வருகிறார்.

இது போதாது என்று தற்போது அடுத்த ஒரு தொழிலில் கால்தடம் பதிக்க உள்ளார். அதாவது  நடிகை நயன்தாரா லிப் பாம் கம்பெனி உடன் இணைந்து பல அழகு சாதனப் பொருள்களை தயாரிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இதற்கு விளம்பரப்படுத்தும் வகையில் நடிகை நயன்தாரா விதவிதமான லிப் பாம்  உபயோகித்து மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடந்து வருகிறாராம். ஏற்கனவே நயன்தாராவுக்கு இருக்கும் பட வாய்ப்புக்கு  உட்காரக் கூட நேரம் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு பிசினஸில்  அடி எடுத்து வைப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.