சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என கௌரவமாக அழைப்பது வழக்கம் அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி ஓரளவு வெற்றியை பெற்றது மட்டும் இல்லாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது அந்த வகையில் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டது இவ்வாறு இந்த காதல் தற்போது திருமணத்தில் முடியும் என பலரும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் காதலித்து வருவது மட்டுமில்லாமல் லிவ்விங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது மேலும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அடிக்கடி ஒன்றாக இணைந்து கொண்ட புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் புது வருட பிறப்பை முன்னிட்டு துபாயில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.