தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டுள்ளார் இது போதாத குறைக்கு சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை அள்ளுகிறார். சினிமா தான் கதியென கடந்த நயன்தாரா..
நானும் ரவுடிn தான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார் 7 வருடங்கள் இந்த காதல் போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரது முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டார் அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என இரண்டையும் பிரித்து சூப்பராக பயணித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக இந்த ஜோடிக்கு நாலா பக்கமும் பணமும் குவிந்து கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கண்டிஷன் போட்டு அலற விட்டிருக்கிறார் அது குறித்து விளாவரியாக பார்ப்போம். சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் கமிட்டாகும் பொழுது அவரிடம் பல அக்ரீமெண்ட்டில் போட்டு கையெழுத்து வாங்குவார்கள்.
அதாவது எப்படிப்பட்ட அக்ரிமெண்டாக இருக்கும் என்றால் நீங்கள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் வேறு படத்திற்கு கொடுக்கக் கூடாது மேலும் திருமணமும் செய்து கொள்ளக் கூடாது என பல இருக்குமாம். அப்படி அக்ரிமெண்ட் போடுவது நல்லது ஏனென்றால் இவர்கள் திருமணம் செய்து கொண்டால் சில காலங்கள் படத்தில் நடிக்காமல் ஒதுங்குவார்கள்.
அதனால் படத்தின் சூட்டிங் பாதிக்கும் மேலும் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய ஒரு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.. அப்படி நடக்காமல் இருப்பதற்காக அக்ரிமெண்ட் போடுவது வழக்கம். அந்த வகையில் “பாஸ் என்கின்ற பாஸ்கரன்” திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தமான உடன் படத்தின்..
தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசன் அணுகும் பொழுது கூட ஒரு அக்ரீமெண்ட் சேர்ந்து காட்டி இருக்கிறார் அதில் படம் முடியும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என எழுதுகிறாராம் அதை பார்த்ததும் நயன்தாரா சிரித்துவிட்டு இதுதான் சரி இப்படித்தான் இருக்க வேண்டும் நான் ஒரு தயாரிப்பாளராக இருந்திருந்தால் இதை தான் பண்ணி இருப்பேன் எனக்கூறி கையெழுத்து போட்டு இருந்தாராம்.