விஜய் சேதுபதியையே ஓரங்கட்டும் நயன்தாரா.! பல கோடிகளால் பயத்தில் விக்னேஷ் சிவன்.

nayanthara-vijay-sethupathi
nayanthara-vijay-sethupathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவர் மனதிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் சேர் போட்டு அமர்ந்து உள்ளவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மிகவும் கெத்தான நடிகையாக வலம் வருகிறார். தற்போது உள்ள இளம் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ஹீரோயினாக  இருக்கிறார்.

தற்போது இவர் தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பிறகு நெற்றிக்கண் மற்றும் தெலுங்கில் ஆரடுகுல புல்லட் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் மூன்றும் விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படங்களை தொடர்ந்து புதிதாக லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியார் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு இவர் கமிட்டாகிவுள்ள திரைப்படங்களை பார்க்கும் போது கிட்டத்தட்ட 50 கோடிக்கு ஒப்பந்தமாகி உள்ளார். அட்வான்ஸ்சாக 20 கோடி வாங்கிவிட்டாராம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது விஜய் சேதுபதியை விடவும் நயன்தாரா தான் அதிகபடியான திரைப்படங்கள் மற்றும் சம்பளம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது.