தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அனைத்து திரைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாமல் சோலோவாக நடித்தும் கலக்கி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக நயன்தாரா நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவே இனிவரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில்இந்த படத்தினை தொடர்ந்து ஜெய்யுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. இவ்வாறு நயன்தாரா பேட்டி ஒன்றில் தனது புடவையின் ரகசியத்தை பற்றி கூறியிருக்கும் நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பொதுவாக நயன்தாரா ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான மாடலில் புடவையை அணிந்து கலக்கி வருகிறார்.
மேலும் இவருடைய புடவை ஸ்டைலை பார்க்கும்பொழுது இவர் இந்த படத்தில் தான் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்து விடும். எனவே டிடி பேட்டி ஒன்றில் நயன்தாரா மாதிரி யாரும் சாரி கட்ட மாட்டாங்க அதிலும் அறம் படத்தில் ஒரு மாதிரி இருப்பீங்க விஸ்வாசம் படத்துல ஒரு மாதிரி இருப்பீங்க இவ்வாறு ஒவ்வொன்றிலும் வித்தியாசம் தெரியுது எப்படி என கேட்டார்.
அதற்கான நயன்தாரா பொதுவாக என்னுடைய பழைய படங்களை எடுத்து பார்க்கும் பொழுதே தெரியும் ஒரே மாதிரியான புடவை ஸ்டைலில் தான் நடித்திருப்பேன் பொதுவாக ஆக்ட்ரஸ் என்னும் பொழுது ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஸ்டைலில் டிரசை மாற்ற வேண்டும் அப்படி ஒரு கட்டத்தில் நான் என்னுடைய ஸ்டைலை மாற்ற ஆரம்பித்தேன் அதாவது ஒரு படத்தை பார்க்கும் பொழுது இது இந்த படம் எனும் சொல்லும் அளவிற்கு புடவை அணிந்திருப்பேன் அப்படிதான் அனைத்து படங்களும் ஒவ்வொரு ஸ்டைலில் புடவை அணிந்தேன் எனவே காஸ்ட்யூமில் மிகவும் கவனமாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்.