தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அண்மையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைக்கு தாயாக தற்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறார் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பல்வேறு புதிய பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்தி வருகிறார்.
அந்த வகையில் நயன்தாரா கையில் தற்பொழுது கனெக்ட், ஜவான், நயன்தாரா 75 போன்ற திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன இதில் முதலாவதாக கனெக்ட் திரைப்படம் வெளிவர இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது நயன்தாராவுடன் கைகோர்த்து சத்யராஜ், வினய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
அண்மையில் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று போடப்பட்டது அதை நயன்தாரா பார்த்துவிட்டு வெளியே வந்தார் அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் ப்ரோமோஷன்னில் கலந்து கொண்டார் அப்பொழுது பேசிய நயன்தாரா. ஆரம்ப காலகட்டத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சி என்றால் நடிகர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்..
நடிகைகளை ஓரம் தள்ளி வைப்பார்கள் அதனால் தான் நான் ஆரம்பத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ஆனால் தற்பொழுது நிலைமை மாறிவிட்டது தயாரிப்பாளர்கள் பெண்களை மையப்படுத்தி பல படங்களை தயாரிக்கிறார்கள் பெண்களுக்கு தற்பொழுது நல்ல முன்னுரிமை இருக்கிறது அதனால் தான் தற்பொழுது தென்படுகிறேன் என கூறினார் மேலும் தன்னை தாக்கி பேசிய மாளவிகா மோகனனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மாளவிகா மோகனன் நயன்தாராவை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஒரு ஹாஸ்பிடலில் சீனில் ஹீரோயின் முழு மேக்கப் உடன் முடி கூட கலையாமல் இருப்பார் இருப்பார் என தாக்கி பேசினார் அதற்கு நயன்தாரா தற்பொழுது பதில் சொன்னது.. அதுக்காக முடியை விரிச்சு போட்டா உக்காந்திருப்பது. ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என கூறினார். மோசமாக இருக்கக் கூடாது என இயக்குனர் சொன்னார்கள் அவர்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்து நடித்தேன் என கூறினார்.