குழந்தைகள் வந்த நேரம் நடிகை நயன்தாரா காட்டில் வீசும் பணமழை..!

nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக இருக்கிறார் இவர் தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் சினிமா உலகில் பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்து  வெற்றி படங்களை கொடுத்து பல கோடிகளை சம்பாதித்து இருந்தாலும்..

நிஜ வாழ்க்கையில் இவர் அந்த அளவிற்கு சிறப்பாக வாழவில்லை.. சர்ச்சைகளில் மட்டுமே சிக்கி சின்னபின்னமானார் ஒரு வழியாக நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன்உடன் காதல் வயப்பட பின் இருவரும் ஏழு வருடங்கள் காதலித்தனர் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திரை உலக நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு இந்த ஜோடி சினிமா, வாழ்க்கை என இரண்டையும் சரியாகப் பிரித்து பொழுதை கழித்து வந்தனர் இதனால் இந்த ஜோடி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போன ஜோடியாக பார்க்கப்பட்டது. இப்படி இருந்த நிலையில் திடீரென இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் நயன்தாரா அதன் புகைப்படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தன.

புகைப்படத்தை பார்த்த பலரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மறுபக்கம் குழந்தை வந்த நேரம் நயன்தாராவுக்கு நல்ல ராசி வந்துவிட்டது என பலரும் கூறுகின்றனர் ஏனென்றால் தொடர்ந்து பெரிய பெரிய பட வாய்ப்புகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நயன்தாரா கேட்கும் சம்பளத்தையும் கொடுக்கின்றனர்.

அந்த வகையில் ஜவான் படத்தில் நடிப்பதற்காக 10 கோடி சம்பளம் வாங்குகிறார் மேலும் ஏகே 62 படத்தில் நடிக்கவும் 10 கோடி சம்பளம் வாங்க உடுக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம்.

nayanthara
nayanthara