தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி இவர் தளபதி விஜயை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் அந்தவகையில் பல வருட போராட்டத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நமது இயக்குனர் லயன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க அட்லீக்கு இந்த திரைப்படத்தின் மூலமாக பல்வேறு மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் மகன் போதை வழக்கில் மாட்டிக் கொண்டதன் காரணமாக தன்னுடைய மகனை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் அட்லி திரைப்படத்திலிருந்து ஷாருக்கான் விலகி தன் மகனை காப்பாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் சாருகான் மிகப்பெரிய நடிகர் என்பதன் காரணமாக திரைப்படத்தின் காட்சியை முடித்து விட்டு உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்ல முடியாமல் தயாரிப்பு நிறுவனமும் தவித்து வருகிறார்கள் இந்நிலையில் நயன்தாராவின் காட்சியாவது எடுப்போம் என திட்டமிட்டு எடுத்துள்ளார்கள்.
ஷாருக்கான் போலவே நயன்தாராவும் மிக பிஸியான நடிகை ஆகையால் இருவரும் கால்சீட் கொடுத்ததன் காரணமாகத்தான் திரைப்படம் சரியாக எடுக்க முடிந்தது இந்நிலையில் ஷாருக்கான் சென்றதன் காரணமாக நயன்தாரா மற்றும் ஷாருகான் ஆகிய இருவரின் காட்சியையும் எப்படி எடுப்பது என்று தலையை பிடித்துக்கொண்டு இருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் நயன்தாரா சமீபத்தில் என்னுடைய காட்சியை சீக்கிரம் முடியுங்கள் ஏனெனில் எனக்கு மற்ற திரைப்படத்தின் காட்சிகள் இருக்கிறது இந்த ஒரு திரைப்படத்தை மட்டும் நம்பி மற்ற திரைப்படத்தில் நடிக்க முடியாமல் இருக்க முடியாது ஆகையால் கதையில் மாற்றம் செய்யுங்கள் இல்லையெனில் வேறு கதாநாயகியை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம்.
மேலும் ஷாருக்கானின் மன நிலைமையையும் புரிந்து கொள்ள தான் வேண்டும் ஆகையால் ஷாருக்கானை திட்ட முடியாமலும் நயன்தாராவிடம் கெஞ்ச முடியாமலும் அட்லி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.