வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மார்க்கெட் இல்லாத நடிகரின் படத்தில் இணைந்த நயன்தாரா.! எதிர்பாராத கூட்டணி..

nayanthara-1
nayanthara-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிறகு கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் மார்க்கெட் குறைந்துவிடும் என்பதற்காக தான் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள் அப்படி இந்த தகவல் உண்மை என நயன்தாராவின் வாழ்க்கையில் தெரியவந்துள்ளது. பொதுவாக சினிமாவில் பிரபலம் அடைந்ததற்கு பிறகு நயன்தாரா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக படங்கள் வரிசை கட்டி நிற்கும் ஏன் கால் சீட் கூட இருக்காது.

இப்படி இருந்து வந்த இவருடைய மார்க்கெட் தற்பொழுது குறைந்து அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் ஒன்றில் மட்டும் தான் நடித்து வருகிறார். இந்த படமும் திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான படம் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இதுவரையிலும் நயன்தாராவின் புது படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்து வருகிறது.

மேலும் இவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்களும் தோல்வியினை பெற்று வருகிறது அப்படி சமீபத்தில் ரிலீசான படம் தான் கனெக்ட். இந்தப் படம் படம் தோல்வியை சந்தித்த நிலையில் தற்பொழுது எதிர்பாராத ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார் நயன்தாரா.

அது வேறு யாருமில்லை நடிகர் ராகவா லாரன்ஸ் தான் இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் புதுமுக நடிகைகள் நடித்துவரும் நிலையில் தற்பொழுது வேறு வழி இல்லாமல் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்தினை வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் படத்தினை இயக்கிய இயக்குனர் ரத்தினம் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தினை தயாரிப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.