தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் முதலில் மலையாளத்தில் ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு தமிழில் 2005 ஆம் ஆண்டு ஐயா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து டாப் ஹீரோயின் படங்களில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றார் இப்படி ஓடிய நயந்தாரா ஒரு கட்டத்தில் பல சர்ச்சைகளிலும் சிக்க ஆரம்பித்தார் இதனால் அவருடைய மார்க்கெட் கீழே இறங்கியது இதிலிருந்து மீண்டு வர அஜித்தின் பில்லா படத்தில் கிளாமராக நடித்து மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார்.
அன்றிலிருந்து இன்று வரையிலும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர். அவ்வபொழுது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இப்படி திரை, நிஜ வாழ்க்கையில் வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்த வரும் நயன்தாராவை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் திட்டி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் எஸ்பி ஜெகநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஈ. இந்த படத்தில் ஜீவாவின் தந்தை ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தார் படத்தில் ஜீவா,நயன்தாரா மற்றும் பலர் நடித்து வந்தனர் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார்.
இதனால் அப்பொழுது படத்தின் சூட்டிங் சரியாக வராமல் போனார் மேலும் நயன்தாரா சிம்புவுடன் மொபைலில் பேசி வந்தார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது ஒரு நாள் நயன்தாரா சிம்புவின் காதலை அறிந்த இயக்குனர் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியிடம் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து ஆர் பி சௌத்ரி நயன்தாராவை கடுமையாக திட்டி உள்ளார். பயந்து போன நயன்தாரா உடனடியாக படத்தை முடித்துக் கொடுத்தாராம்.