எப்பொழுதும் டாப் நயன்தாராதான்.! வதந்திக்கு முற்றுபுள்ளி

nayanthara-001
nayanthara-001

சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நடிகர்,நடிகைகளை பற்றி பேசுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாவது வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் ஒரு முன்னணி நடிகை திரைப்படத்தில் நடித்தால் அந்த படத்தில் அவர் நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை தெரிந்துக் கொள்வதில் ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னிலையில் இருந்து வரும் நிலையில் அவர் முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டார் என்ற ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்தது. தற்பொழுது இந்த தகவல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போதும் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் முன்னணி வகித்து வருகிறார் என்ற தகவல் உறுதியாகிவுள்ளது.

அதாவது சமீபத்தில் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் தி லெஜண்ட் இந்தத் திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இவர் ரஜினி ஸ்டைலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது இத்திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக பாலிவுட் பிரபல நடிகை ஊர்வசி ரௌட்டாலா நடித்திருந்தார்.

urvashi
urvashi

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ஊர்வசி ரௌட்டாலா ரூபாய் 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் இதன் காரணமாக நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 10 கோடி மட்டுமே சம்பளம் வாங்கும் வரும் நிலையில் நயன்தாராவை ஓவர் டாக் செய்து ஊர்வசி ரௌட்டாலா முன்னணி வகித்து வருகிறார் எனக் கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இது வெறும் வதந்தி மட்டுமே என தெரியவந்துள்ளது. ஏனென்றால் ஊர்வசி ரௌட்டாலா தி லேஜண்ட் நயன்தாராவை விட குறைவான சம்பளமே பெற்றுள்ளார் அதாவது 7 முதல் 8 வரை கோடி சம்பளம் பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.