நயன்தாரா ஏன் இப்படி தப்பான முடிவு எடுத்தானு தெரியல என்று கூறிய குட்டி பத்மினி.!

nayanthara
nayanthara

மற்ற நடிகைகள் போல் அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடிக்காமல் தமிழில் மட்டும் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.  லேடி சூப்பர் ஸ்டாராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தற்பொழுது உள்ள அனைத்து முன்னணி நடிகைகளுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர் நடிப்பில் கடைசியாக காத்துவாக்குல 2 காதல் படம் வரை இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது.  இவரின் மீது பல விமர்சனங்கள் மற்றும் இவருக்கு எதிராக பல பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து சிறந்த பெண்மணியாக திகழ்கிறார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே சினிமாவில் பல எதிர்ப்புகள் இருந்து வரும் அதே போல் நயன்தாராவும் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதோடு மட்டுமல்லாமல் இவரின் மீது பல சர்ச்சைகளும் தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி நயன்தாராவை பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இறந்தார்.  அதோடு நயன்தாரா மற்றும் பிரபுதேவா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

எனவே குட்டி பத்மினி நயன்தாரா இரண்டாவது முறையாக பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள எடுத்த முடிவு எனக்கு பிடிக்கவில்லை ஒரு மிகப்பெரிய இடத்திலிருந்து ஏன் இப்படி ஒரு தப்பான முடிவு எடுத்தாள் என்று தெரியல, அதன்பின் அந்த திருமணம் தோல்வியான பிறகு வேறொரு இடத்திற்கு வந்துவிட்டார்கள் அதன் பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்த தகவலை சமீப பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.